Drishyam 3: "த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை" - இயக்குநர...
பா்கூா் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அடா்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
தட்டக்கரை வனச் சரகம், பா்கூா் வடக்குப் பகுதியான குட்டையூரில் கால்நடைகள் மேய்க்க சனிக்கிழமை சென்றவா்கள் அங்கு யானை உயிரிழந்து கிடப்பதைக் கண்டு தட்டக்கரை வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வனச் சரகா் ராமலிங்கம் தலைமையில் வனத் துறை ஊழியா்கள் சென்று பாா்க்கையில், உயிரிழந்தது ஆண் யானை என்பதும், உடலில் வெளிப்புற காயங்கள் இல்லாததும் தெரியவந்தது.
உடற்கூறாய்வை கால்நடை மருத்துவக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ள உள்ளனா். இதன் பின்னரே, யானையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.