செய்திகள் :

'அம்மா, அப்பா இல்லைன்னா பிச்சை தான் எடுத்துட்டிருந்திருப்பேன்!' - `கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

post image

`கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் பரிச்சயமானவர் ராகவேந்திரன். இவர் தொடர்ந்து சில தொடர்களிலும் நடித்திருந்தார். மீடியாவை விட்டு விலகப் போவதாக முன்பு இவர் அறிவித்திருந்தார். அந்த செய்தி வைரலாகப் பரவியது. சில ஆண்டுகள் கழிந்திருக்கிறது. தற்போது இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவுடன் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

`கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

கனா காணும் காலங்கள்

" மீடியாவில் பெரிய பிரேக் தான் எடுத்திருந்தேன். என்னுடைய கரியரின் தொடக்கத்தில் பிளே பேக் சிங்கராகணும்னு தான் வந்தேன். விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஆடிஷனுக்கு குடும்பத்தோட போவோம். அப்படி போனப்ப தான் `கனா காணும் காலங்கள்' தொடருக்கான ஆடிஷன் நடக்குதுங்கிறது தெரிஞ்சது. எனக்கு ஆக்டிங் பற்றியெல்லாம் பெருசா ஒண்ணுமே தெரியாது. வீட்ல ஆடிஷனுக்கு அப்ளை பண்ணச் சொன்னாங்கன்னு பண்ணினது தான்! அதுல செலக்ட் ஆகித்தான் அந்தத் தொடர் வாய்ப்பு கிடைச்சது.

அந்தத் தொடரில் நாங்க எல்லாம் சப்போர்ட்டிவ் ஆக்டர்ஸ் தான்! நாங்க தான் `கனா காணும் காலங்கள்'னு சொன்னா அது என் தொழிலுக்கு நான் பண்ற துரோகம் ஆகிடும். அந்தத் தொடர் உண்மையா வெற்றி பெற அதுல நடிச்சிருந்த முன்னணி நடிகர்கள் தான் காரணம்!" என்றவரின் தற்போதைய திட்டம் குறித்துக் கேட்டோம்.

`கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

" ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கேன். சின்னப் படம் பட்ஜெட் படமாக இருந்தாலும் ஆடியன்ஸூக்குத் தேவையானதைக் கொடுக்கணும்னு அதுக்கு ஒர்க் பண்ணிட்டிருக்கேன். ஆடியன்ஸை முட்டாளாக நினைச்சு ஒரு ஸ்கிரிப்ட் எழுதாதீங்கன்னு நான் எல்லா கிரியேட்டர்ஸ்கிட்டேயும் சொல்லிக்கிறேன். ரெஸ்பான்சிபிள் ஆன ஃபிலிம் மேக்கர் ஆக இருக்கணும்னு ஆசைப்படுறேன். எனக்குன்னு சில நெறிமுறைகள் இருக்கு. அதை மீறி படம் எடுக்க மாட்டேன்!" என்றவர் தொடர்ந்து பேசினார்.

" இப்ப என்னோட அம்மா, அப்பா மட்டும் இல்லைன்னா நான் பிச்சை தான் எடுத்துட்டு இருப்பேன். இதை சொல்லித்தான் ஆகணும். கலையைப் பொறுத்தவரைக்கும் வாய்ப்புன்னு ஒண்ணு கிடைச்சா தான் வேலை. பெரிய லைம்லைட்ல இருந்துட்டு கீழே விழுந்து மறுபடி எழுந்திருக்கிறது ரொம்ப கஷ்டம். எல்லாத்தையும் பார்த்துட்டு ஒருத்தன் மறுபடி அவன் கரியரை ஆரம்பத்தில் இருந்து தொடங்குறான்ல அவன் லைஃப் ரொம்ப வலியா இருக்கும். அதைத்தான் இப்ப நான் ஃபேஸ் பண்ணிட்டிருக்கேன். நான் ரொம்ப ஜாலியா கலகலன்னு இருந்த பையன். பெரிய சரிவுக்குப் பிறகு அப்படியே அமைதியாகிட்டேன். 

`கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

நான் மீடியாவை விட்டுப் போறேன்னு சொன்னது அந்த வயசுல எல்லாருக்கும் இருக்கிற விரக்தி. அதை நாம மனசார சொல்லியிருக்க மாட்டோம் ஆனா, கேட்கிறவங்க மனசார எடுத்துப்பாங்க. அதுக்கப்புறம் திரும்ப வந்துட்டேன்னும் நான் மக்கள்கிட்ட சொன்னேன். விஜய் டிவி, ஜீ தமிழ்னு நான் வேலை பார்த்துட்டு இருக்கும்போதே எனக்கு சம்பளம் ரொம்ப கம்மி தான். இப்ப அந்த வேலையும் இல்ல! 33 வயசாகுது இன்னும் நான் கல்யாணம் பண்ணிக்கலையே? அதுக்கும் பொருளாதார சூழல் தான் காரணம். எனக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கணும்னு ஆசை!" என எமோஷனலாக பேசியவரிடம் இயக்குனர் செழியன் குறித்துக் கேட்டோம்.

" செழியன் சார் நான் எடுக்க ஆசைப்படுற சினிமா தான் எடுக்கிறார். அதனால அவர்கிட்ட கத்துக்க நினைச்சேன். இப்ப அவர் கூட பயணிச்சிட்டிருக்கேன்!" என்றார்.

`கனா காணும் காலங்கள்' ராகவேந்திரன்

ராகவேந்திரன் இன்னும் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக நம்மிடம் பேசியிருந்தார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Siragadikka aasai : ரோகிணி அறையில் க்ருஷின் உடையை கண்டுப்பிடித்த முத்து, மீனா - அடுத்து?

சிறகடிக்க ஆசை சீரியல் த்ரில்லாக நகர்கிறது. ரோகிணி மாட்டிக் கொண்டது ஒருபுறம் ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தாலும், அடுத்தடுத்து கதையில் நடக்கும் ட்விஸ்ட் சீரியலுக்கு பாராட்டுகளை வாங்கிக் கொடுத்துள்ளது. ... மேலும் பார்க்க

CWC : விரைவில் `குக்கு வித் கோமாளி சீசன் 6' - புது கோமாளி அவதாரம் எடுக்கும் பிக் பாஸ் பிரபலம்?

`குக்கு வித் கோமாளி' இளைஞர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களுள்ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கெனதனியொரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதிய புரொடக்‌ஷன் நிறுவனம் கையிலெடுத்த `குக்கு வித் கோமாளி சீசன் 5' நி... மேலும் பார்க்க

Siragadikka aasai : மனோஜால் முத்துவுக்கு வந்த புதிய பிரச்னை - தீர்வு காண்பாரா பாட்டி?

சிறகடிக்க ஆசை சீரியலில் இயக்குநர் வைத்த அதிரடி காட்சிகள் ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டது. ரோகிணி மொத்தமாக மாட்டிக் கொண்டிருந்தால் ஸ்வாரஸ்யமாக இருந்திருக்காது. எனவே அவரின் மலேசியா பொய்கள் மட்டும் வெளிப்... மேலும் பார்க்க

Ayyanar Thunai: மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நிலா, சோழனின் காதல் கதை என்னவாகும்?

அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில் நிலா சோழனின் வீட்டை விட்டு வெளியேறுகிறார். சேரனின் நல்ல மனதிற்காக நிலா ரிசப்ஷனுக்கு சம்மதிக்கிறார். அதே சமயம் சேரனிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். ... மேலும் பார்க்க

ஹூசைனி என்கிற வீரனை கடுமையான நோய் தாக்கி வீழ்த்தியிருக்கு - கலங்கும் குடும்ப நண்பர் ஜெயந்தி

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிஹான் ஹுசைனி உடல்நலக் குறைவால் இன்று (25.03.2025) காலமாகினார். அவரின் மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் A.L.S தயாரிப்பு ந... மேலும் பார்க்க