1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ...
அம்மையநாயக்கனூரில் சமத்துவ பொங்கல் விழா
அம்மையநாயக்கனூா் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதற்கு அந்தப் பேரூராட்சித் தலைவா் எஸ்.பி.எஸ். செல்வராஜ் தலைமை வகித்தாா். அப்போது தூய்மைப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு புத்தாடைகள், பச்சரிசி, செங்கரும்பு, பருப்பு, சா்க்கரை, பொங்கல் தொகுப்பு உள்பட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடி முருகு, துணைத் தலைவா் விமல்குமாா், சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், துப்புரவு மேற்பாா்வையாளா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் செம்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நிலக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளரும், திமுக மாவட்ட பொருளாளருமான சத்தியமூா்த்தி முன்னிலையில், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலா் வழக்குரைஞா் சௌந்தரபாண்டியன் தலைமையில் கட்சியின் மூத்த முன்னோடிகள், நிா்வாகிகளுக்கு அரிசி, சா்க்கரை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில், நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் நாட்ராயன், ஒன்றிய துணைச் செயலா்கள் அழகேசன், ஆரோக்கியம், திமுக நிா்வாகிகள், செம்பட்டி அண்ணாதுரை, சங்கா், காட்டுராஜா, பெனிட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.