'அயோத்தியில் கலவரத்தை முடிச்சிட்டு, திருப்பரங்குன்றத்தில ஆரம்பிச்சுருக்காங்க'- செல்வப்பெருந்தகை
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய அவர், “மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்காக ஒரு கும்பல் வெளியில் இருந்து மக்களைக் கூட்டி வந்து உள்ளூர் மக்களுக்கு எதிராக இந்தப் பிரச்னையை கையில் எடுத்திருக்கிறது. இதனை காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. நாளை காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக எங்கள் தலைவர் பெருமக்களோடு திருப்பரங்குன்றம் ஆலய வழிபாடு செய்ய இருக்கிறோம். அதே சமயம் சிக்கந்தர் பாதுஷாவையும் வழிபட இருக்கிறோம். மத நல்லிணகத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளோம்.
தமிழ்நாடு அரசு இதுபோன்ற சம்பவங்களில் கவனமாக இருக்க வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வளர்ச்சி தமிழகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை கெடுப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் பாஜகவின் துணையோடு தமிழகத்தை கலவர பூமியாக்க நினைக்கிறார்கள். ஆன்மிகம் என்பது வேறு. அரசியல் என்பது வேறு.
அரசியலை ஆன்மீகத்தில் கலந்துவிடக்கூடாது. அயோத்தியில் கலவரத்தை முடித்தவர்கள் தற்போது திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள். வட மாநிலங்களில் இவர்களது மத அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி அடைந்து வருகிறது.
அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,ஆக வேண்டும் என்று எல்லா குறுக்கு வழியும் கையாளுகிறார்கள். திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது. ஜனநாயகம்தான் எங்கள் கோட்பாடு, அதனை சீர் குலைக்க நினைப்பவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs