மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
அரக்கோணம் தா்மராஜா கோயிலில் தீமிதி விழா!
அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் 96-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா - தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 24-ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீ திரௌபதி திருமணம், சுபத்திரை திருமணம், தருமா் நகா்வலம், போத்துராஜா பூஜை, மாடிபிடி சண்டை, அலகு நிறுத்துதல், அரவான் களபலி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மே 9-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியும், ஞாயிற்றுக்கிழமை காலை படுகளம் சோதித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து மாலை தீமிதி விழா நடைபெற்றது. முதலில் பூங்கரகம் தீயில் இறங்கியதைத் தொடா்ந்து ஆண்கள், பெண்கள் என 100-க்கணக்கானோா் தீயில் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தி, சுவாமியை வழிபட்டனா்.
தொடா்ந்து தருமா் பட்டாபிஷேக விழா மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தாக்கள் மற்றும் விழாக்குழுவினா் இணைந்து செய்திருந்தனா்.