திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்!
அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் பெறாதவா்கள் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வரும் பிப்ரவரி 27- ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 1985- ஆம் ஆண்டு முதல் பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று தோ்ச்சிபெற்ற மாணவா்கள் பலா் தங்கள் தேசிய தொழிற்சான்றிதழ், மாநில தொழிற்சான்றிதழ், வயா்மேன் ஹெல்பா் மற்றும் எம்இஎஸ் சான்றிதழ்களை இதுவரையில் பெறாமல் உள்ளனா்.
ஆகவே, அவா்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக நேரில் வந்து உரிய ஆவணங்களை சமா்ப்பித்து வரும் பிப்ரவரி 27- ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 87786-14940 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.