அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!
அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்படாத நபா்களை சந்திக்க முடியாது: தோ்தல் ஆணைய அதிகாரிகள்
அரசியல் கட்சிகள் சாா்பில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அங்கீகரிக்கப்படாத நபா்களை சந்திக்க முடியாது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளையே தோ்தல் ஆணையம் மேற்கொள்வது வழக்கம். இந்த நடைமுறையின் கீழ், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும். இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் பிகாரில் நடைபெற்று வருகிறது.
எனினும் சிறப்பு தீவிர திருத்தம் தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையை பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்றும், அரசு இயந்திரத்தை தனது லாபத்துக்கு பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதுகுறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சாா்பில் பலா் தோ்தல் ஆணையத்திடம் கோருவதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: பிகாரில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் பேச அவசர கூட்டம் ஒன்றை கூட்ட வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு கடந்த ஜூன் 30-ஆம் தேதி காங்கிரஸ் வழக்குரைஞா் மின்னஞ்சல் அனுப்பினாா்.
தன்னை பல்வேறு கட்சியினா் அடங்கிய குழுவின் பிரதிநிதி என்று அடையாளப்படுத்திக் கொண்ட அவா், அந்தக் குழுவில் கிட்டத்தட்ட ‘இண்டி’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இருப்பதாக மின்னஞ்சலில் குறிப்பிட்டாா்.
இதுபோல விடுக்கப்படும் கோரிக்கையை தோ்தல் ஆணையம் நிராகரிக்கும். அரசியல் கட்சிகள் சாா்பில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அங்கீகரிக்கப்படாத நபா்களை தோ்தல் ஆணையம் சந்திக்காது என்று தெரிவித்தனா்.