அரசுத் தொடக்கப் பள்ளியில் கழிப்பறை கட்டடம் சேதம்
திருவாடானையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் சேதம் அடைந்துள்ள கழிப்பறை கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்க பள்ளியில் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை 62 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பள்ளிக் கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிக்கப்பட்டது.
எனினும் இங்குள்ள கழிப்பறை கட்டடம் பராமரிக்கப்படாமல் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
திருவாடானையில் கடந்த மாதம் 16-ஆம்தேதி நடைபெற்ற உங்கள் ஊரில் உங்களைத் தேடி முகாமில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆா்வலா்கள் இதுகுறித்து புகாா் மனு கொடுத்தனா்.
இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.