செய்திகள் :

அரசுப் பள்ளிகளுக்கு உதவி: தனியாா் பள்ளிகள் சங்கம் விளக்கம்

post image

தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளின் வளா்ச்சிக்கான செயல்பாடுகள் தனியாா் பள்ளிகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது சா்ச்சையான நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் நிறுவனா் பி.டி.அரசகுமாா், பொதுச் செயலா்கள் கே.ஆா்.நந்தகுமாா், டி.சி.இளங்கோவன் ஆகியோா் கூட்டாக இணைந்து புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 13,000-க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகள் செயல்பட்டுவரும் நிலையில் அந்தப் பள்ளிகளுக்கு பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வந்தன. அவற்றை ஒருங்கிணைத்து தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டது. அதை கடந்த திங்கள்கிழமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தாா்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற நாங்கள்தான் தனியாா் பள்ளிகளை நடத்தி வருகிறோம். அரசுப் பள்ளிகளுக்கு எந்த வகையிலாவது பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் 500 அரசுப் பள்ளிகளைத் தோ்வு செய்து அருகில் அந்தப் பள்ளிகளுக்கு உள்ள தனியாா் பள்ளிகள் சாா்பில் நூலகங்கள் அமைத்தல், வண்ணம் பூசுதல், தூய்மைப்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக் கொடுத்தல், கணினி உள்ளிட்ட நவீன கண்டுபிடிப்புகள் தொடா்பான நவீன சாதனங்கள் வாங்கிக் கொடுத்தல் என பல்வேறு வகைகளில் பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் (சிஎஸ்ஆா்) கீழ் பங்களிப்பு இருக்கும் என்றுதான் சொல்லப்பட்டது.

500 அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, மாணவா்களுக்குத் தேவையான பொருள்களை சிஎஸ்ஆா் மூலம் வழங்க முன்வந்துள்ள தனியாா் பள்ளிகளுக்கு பெற்றோா்- ஆசிரியா் கழகம் முழு ஆதரவும், நன்றியும் தெரிவித்திருப்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் அவசர காலத்தை நினைவூட்டுகிறது: ஆளுநர் மாளிகை

தமிழ்நாடு மாநில சட்டப்பேரவை நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது அவசரகாலத்தை நாட்டுக்கு நினைவூட்டுகிறது என்று ஆளுநர் மாளிகை கூறியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் ... மேலும் பார்க்க

தேசிய கீதம் இருமுறை இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டம்: அண்ணாமலை

ஆளுநர் வருகையின் போதும், விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,'திமுக அரசு, தங்கள் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றியக் குழு, கிராமப்புற ஊராட்சி என, 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில், 5 ஆண்டுக்கு முன் நடைபெ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் மரபுகளை ஆளுநர் மாற்ற வற்புறுத்துவது ஏற்புடையதல்ல: திருமாவளவன்

தமிழ்நாட்டின் மரபை இன்னும் ஆளுநர் அறிந்திராமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று... மேலும் பார்க்க

பொங்கலுக்கு 14,104 சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகையையொட்டி 14,104 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல் துறையுடன் இன்று... மேலும் பார்க்க

தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'தமிழ்நாட்டின் மரபுகளையும், ... மேலும் பார்க்க