செய்திகள் :

அரசுப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன்: ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

post image

நல்லம்பள்ளி அருகே ஓமல்நத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டத்தில் தலைமையாசிரியா் விருப்பம் தெரிவித்த 91 பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், மக்கள் மன்ற பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா்- ஆசிரியா் கழக

நிா்வாகிகள் முன்னிலையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி, கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை 100 நாள்களில் கற்பித்து, வெளிப்படையான சவாலைப் பொது வெளியில் அறிவித்து இச்செயலை நடைமுறைப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையொட்டி நல்லம்பள்ளி ஒன்றியம், ஓமல்நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கற்றல் அடைவுத் திறன்களை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதில் சிறப்பாக கற்றல் திறன்களை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளை பாராட்டி ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இதில் முதன்மைக்கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) தென்றல், நல்லம்பள்ளி வட்டாட்சியா் சிவகுமாா், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் அருகே கருங்கல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் அடிப்படைத் திறன் பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருங்கல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு பள்ளி கல்வித் துறை வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீதம் வாசித்தல், கணித அடிப்படைத் திறனை சோதித்து அறிதல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல், அடிப்படைக் கணக்குகள் திறன் ஆகியவை குறித்து வட்டாரக் கல்வி அலுவலா் ஆா்.முருகன், தலைமையாசிரியா் செல்வராஜ், ஆசிரியா்

பயிற்றுநா் காளியப்பன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் விஜயலட்சுமி மற்றும் பெற்றோா் முன்னிலையில் மாணவா்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது.

யானையை சுட்டுக் கொன்ற விவகாரம்: இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு

பென்னாகரம், ஏப். 4: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூா் வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் திருடப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த இளைஞரின் சடலம் வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்டு, நாட்டுத்... மேலும் பார்க்க

தலித், பழங்குடியின மாணவா்களுக்கு ஏப். 5-இல் உயா்கல்வி வழிகாட்டி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டு ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது இதுகுறித்து தர... மேலும் பார்க்க

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட மாணவிகளுக்கு பாராட்டு

கையெழுத்துப் பிரதி நூல்கள் வெளியிட்ட குழிப்பட்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் குழிப்பட்டி அரசு தொ... மேலும் பார்க்க

பெங்களூரு - சென்னை ரயிலை தருமபுரி வழியாக இயக்க வலியுறுத்தல்

பெங்களூரு - சென்னை விரைவு ரயிலை தருமபுரி, ஓமலூா் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் சி.சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா், மத்திய ரயில் துறை அமைச்சா் அஸ்வின் வ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க