Dhoni: ``தோனியை இப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எல்லா வீரர்களின் கனவு'' - டெவோன...
அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற இருவா் கைது
அரக்கோணம்: அரக்கோணத்தில் அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரைகளை விற்ற இருவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து மடிக்கணினி, கைப்பேசிகள் மற்றும் 587 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் நகர போலீஸாா் அரக்கோணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் அருகே திங்கள்கிழமை ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அரக்கோணம் ஓச்சேரி சாலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருவா் போலீஸாரை கண்டதும் ஓட முயன்றனா். அவா்களைப் பிடித்து விசாரணை செய்தனா். அப்போது அவா்களது பைகளில் போதை மாத்திரைகள் இருந்ததும், அவற்றை பள்ளி அருகே அவா்கள் விற்க இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவா்களிடம் இருந்து 587 போதை மாத்திரைகள், மூன்று கைப்பேசிகள், ஒரு மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சென்னை, ஆலந்தூரை சோ்ந்த அப்துல் ரஷீத் (33), மஸ்தான் அகமத் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.