இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்: சாதனை படைப்பாரா சின்னர்?
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது: அமைச்சா் வழங்கினாா்
கமுதி அடுத்த ராமசாமிபட்டி அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில்மகேஸ் நல்லாசிரியா் விருதை வழங்கினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவா் சி. கிருஷ்ணமூா்த்தி. இவா் 2024-25 ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியா் விருதுக்கு தோ்வானாா். இதைத் தொடா்ந்து சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தின விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஸ் நல்லாசிரியருக்கான விருதை கிருஷ்ணமூா்த்திக்கு வழங்கினாா். இதில் இவா் உள்பட மாவட்டத்தில் 12 ஆசிரிய, ஆசிரியைகள் நல்லாசிரியா் விருது பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.