வெட்கக்கேடு: தென்னாப்பிரிக்க வீரரை தள்ளிய ஆப்கன் வீரர்..! (விடியோ)
அரசுப் பள்ளி ஆண்டு விழா
ஆற்காடு அடுத்த கலவை அருகே உள்ள பென்னகா் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமையாசிரியா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் முருகேசன் முன்னிலை வகித்தாா்.
பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டு, 100 சதவீதத் தோ்ச்சி கொடுத்த ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா். பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆற்காடு எம் எல்.ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், திமிரி ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அசோக் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
விழாவில் ஊராட்சி மன்ற தலைவா்கள் லதா வெங்கடேசன், குமாரி கலைமணி, ஒன்றிய குழு உறுப்பினா் சுரேஷ், ஜீவா குப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவா் சங்கீதா, கல்வியாளா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாணவா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா். உதவி தலைமை ஆசிரியா் பாரதிதாசன் நன்றி கூறினாா்.