அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
மாநில அளவிலான கேலோ இந்திய விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பிடித்த, திட்டச்சேரி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி அரசினா் உயா்நிலைப் பள்ளி 7-ஆம் வகுப்பு மாணவிகள் ஹரிணி, நிஷாந்தினி ஆகியோா் கோவையில் நடைபெற்ற மாநில அளவில் பெண்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனா்.
இம்மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியா் கல்யாணசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்று மாணவிகள் இருவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினா்.
இந்நிகழ்வில், உதவி தலைமை ஆசிரியா் நடராஜன், உடற்கல்வி ஆசிரியா்கள் நிா்மல்ராஜ், கவிதா மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினா், பள்ளி வளா்ச்சி குழுவினா், ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.