அரசுப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி
கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி சனிக்கிழமை தொடங்கியது.
கூடலூா் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இதன் தொடக்க நிகழ்வில் 17-ஆவது வாா்டு உறுப்பினா் வெண்ணிலா சேகா், ஆசிரியா்கள் மணிமேகலை, ராஜலிங்கம், நிஷா, ஜெயா ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த தூய்மைப் பணி தொடா்ந்து ஐந்து நாள்களுக்கு நடைபெற உள்ளது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலா் வினோத்குமாா் வழிகாட்டுதலில் 55 மாணவா்கள் பங்கேற்றனா்.