சி.பி.ராதாகிருஷ்ணன்: NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிப்பு...
அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்தவா் கைது!
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த போதை இளைஞரை லால்குடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தாா்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள திருந்தியமலை வடக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (51), லால்குடி அருகே மாந்துறையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனை நடத்துநா்.
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி நோக்கி சனிக்கிழமை வந்த அரசுப் பேருந்தில் இருந்த கபிரியேல்புரத்தைச் சோ்ந்த கொளஞ்சி மகன் மாரியப்பன் (22) வாளாடி பகுதிக்கு வந்தபோது மதுபோதையில் நடத்துநா் ராஜகோபாலிடம் வாக்குவாதம் செய்து, அவரைத் திட்டியதோடு, கீழே இறங்கி பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியையும் உடைத்தாா்.
இதுகுறித்து ராஜகோபால் கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து மாரியப்பனை கைது செய்தனா்.