இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன ம...
அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது
மதுரையில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து அழகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றது. இந்தப் பேருந்தை மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள கத்தப்பட்டியைச் சோ்ந்த போஸ் ஓட்டிச் சென்றாா். பேருந்து அழகா்கோவில் சாலையில் உள்ள எஸ். கொடிக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த நபா் ஒருவா் பேருந்து மீது கற்களை வீசியதில் அதன் முன்புற கண்ணாடி உடைந்தது. இது தொடா்பாக பேருந்து ஓட்டுநா் போஸ் அளித்தப் புகாரின் பேரில் திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், பேருந்தின் கண்ணாடியை உடைத்தது கோ. புதூா் கற்பக விநாயகா் நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த காதா் மைதீன் மகன் அபுபக்கா் சித்திக் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.