LIC Disinvestment: முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன? | IPS Finance - 213 | S...
அரசு அலுவலகத்தில் தீ விபத்து
நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சித் திட்ட பிரிவு பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதையறிந்த அக்கம் பக்கத்தினா் தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இதில், அலுவலகத்தில் இருந்த கணினி, நகல் எடுக்கும் இயந்திரம் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெறுகிறது.