செய்திகள் :

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

post image

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என்றும், ஜாக்டோ-ஜியோ போராட்டங்களை அரசியல், ஆட்சி அதிகார கண்கொண்டு நோக்கக்கூடாது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர் கல்வி சார்ந்த ஊக்க ஊதிய உயர்வு, முடக்கி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகளைக் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள். ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வரையறை செய்யப்பட்ட ஊதியம் வழங்குதல், ஒருங்கிணைந்த கல்வித் துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோருக்குப் பணி நிரந்தரம் செய்தல், அரசின் பல்வேறு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களைக் காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர்.

1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்குப் பணி ஓய்விற்குப் பிறகு மாதாமாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உட்பட எதுவும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் முக்கிய அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. லட்சக்கணக்கான குடும்பங்களை மனத்தில் வைத்து, முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

அரசு எந்திரத்தின் நிர்வாக முறை அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து, அதற்கான நியாயமான தீர்வுகளைக் காண வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், அதை இப்போது இருக்கும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு செய்ய முன்வரவில்லை. அதை விடுத்து, கண்துடைப்புக்காகப் பேச்சுவார்த்தை மட்டும் நடத்திவிட்டு, கண்டும் காணாமல் கை விட்டுவிட்டது.

தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் போராட்டம்

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையில் 309 ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் திமுக அரசு ஏமாற்றி உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டமானது ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் அதை மீண்டும் கொண்டுவரப் போவதாக அண்மையில் அறிவித்துள்ளது.

எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாகத் திகழ்கிறோம் என்று மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?

திமுக அரசின் கபச நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும்கூட போராட்டக் களத்தில் உள்ளனர். இது, மிகப் பெரிய கையறு நிலை ஆகும். தற்போதைய ஆளும் திமுக அரசுக்கு இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இதுபோன்ற பாராமுகச் செயல்களால், அரசு மீது அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்து, கையது நிலையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நலன்களை ஆழமாக மனத்தில் வைத்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஒடிசாவில் 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலி!

ஒடிசா மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளில் மின்னல் பாய்ந்து 1,418 பேர் பலியானதாக அம்மாநில வருவாய்... மேலும் பார்க்க

ஆப்கனில் தொடர் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 160 கி.மீ. ஆழத்தில் இன்று (மார்ச் 27) காலை 8.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

சென்னை எழும்பூர் ரயில் நிலைய அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைத்தில் உள்ள அலுவலகக் கட்டடத்தில் முதல் மாடியில் இன்று(மார்ச் 27) ப... மேலும் பார்க்க

சிலி அதிபர் இந்தியா வருகை!

சிலி நாட்டு அதிபர் 5 நாள் பயணமாக இந்தியா வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் ஃபொண்ட் 5 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருவதாக இந்... மேலும் பார்க்க

'இபிஎஸ் அவராகவே பதவி விலக வேண்டும்; இல்லையென்றால்...' - ஓபிஎஸ் எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே பதவி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமமுக சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு த... மேலும் பார்க்க

அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மர்ம கும்பலின் துப்பாக்கிச் சூட்டில் 6 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர். பலூசிஸ்தானின் குவடார் மாவட்டத்தின் கலாமத் பகுதியில் நேற்று (மார்ச் 26) நள்ளிரவு கராச்சியிலிருந்த... மேலும் பார்க்க