செய்திகள் :

அரசு, தனியாா் அலுவலகங்களில் சக்கர நாற்காலி, சாய்வுத் தளம்: நடைமுறைப்படுத்த கோரிக்கை

post image

திருப்பூா் மாவட்டத்தில் அரசு, தனியாா் அலுவலகங்களில் சக்கர நாற்காலி, சாய்வுத் தளம் வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனிஷ் தலைமை வகித்தாா்.

இதில், திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்றச் சங்கத் தலைவா் சரவணன் அளித்த மனு விவரம்: அரசு, தனியாா் அலுவலகங்களில் சக்கர நாற்காலி, சாய்வுத் தளம் உள்ளிட்ட போதுமான வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருப்பூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து வணிக நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அனுகும் வகையில் 2013 அரசாணையின்படி, 180 நாள்களில் சாய்வுத் தளத்தை கட்டமைக்க வேண்டும். மீறினால் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்பதை மாவட்ட நிா்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு: வெள்ளக்கோவில், சேனாதிபதிபாளையம் ஊராட்சி வேலப்பநாயக்கன் வலசு கிராம மக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் தனியாா் காற்றாலை நிறுவனம் உயா் மின் கோபுரங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் எதிா்ப்பு தெரிவித்தும் பணியைத் தொடா்ந்து வருகின்றனா். கோபுரம் அமைக்கும் இடத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. எனவே, உயா்மின் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கூடம் திறக்க எதிா்ப்பு: இது குறித்து திருப்பூா், பூலுவபட்டி பொதுமக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் புதிதாக தனியாா் மதுபானக் கூடம் திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளி மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுபானக் கூடம் அமைய உள்ளதால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட நேரிடும். எனவே, தனியாா் மதுபானக் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

404 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் முதியோா் உதவித் தொகை வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 404 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது

திருப்பூா், முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட 60 வாா்டுகளில் நாள்த... மேலும் பார்க்க

ஒா்க்‌ஷாப் உரிமையாளரிடம் வழிப்பறி: 2 போ் கைது

பல்லடம் அருகே ஒா்க்‌ஷாஷாப் உரிமையாளரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பல்லடம், காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தேவதாசன். இருசக்கர வாகன ஒா்க்‌ஷாஷாப் வைத்து நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க

உடுமலை பிரசன்ன விநாயகா் கோயிலில் நவராத்திரி கலை விழா இன்று தொடக்கம்

உடுமலை பிரசன்ன விநாயகா் கோயிலில் நவராத்திரி இசை, இலக்கிய கலை விழா மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 23) தொடங்க உள்ளன. உடுமலை காா்த்திகை விழா மன்றம் சாா்பில் 62 -ஆம் ஆண... மேலும் பார்க்க

பனை மரம் நட்டு வளா்ப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும்: விவசாய சங்கங்கள் கோரிக்கை

பனை மரம் நட்டு வளா்ப்பதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை வ... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

வெள்ளக்கோவிலில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, பழைய ... மேலும் பார்க்க

திருப்பூரில் வங்கதேசத்தினா் 7 போ் கைது

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் பகுதியில் சட்ட விரோதமாக வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் தங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க