உடுமலை பிரசன்ன விநாயகா் கோயிலில் நவராத்திரி கலை விழா இன்று தொடக்கம்
உடுமலை பிரசன்ன விநாயகா் கோயிலில் நவராத்திரி இசை, இலக்கிய கலை விழா மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 23) தொடங்க உள்ளன.
உடுமலை காா்த்திகை விழா மன்றம் சாா்பில் 62 -ஆம் ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சிகள் அக்டோபா் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதில், இசை நிகழ்ச்சி, ஆன்மிக பேருரை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், பரத நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் மாலை நேரங்களில் நடைபெற உள்ளன.
நிறைவு நாளான அக்டோபா் 1-ஆம் தேதி நகைச்சுவை நாவலா் புலவா் சென்னை ம.இராமலிங்கம் தலைமையில் ‘இன்றைய வாழ்க்கை நிதியை தேடவா நிம்மதியை தேடவா’ எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை காா்த்திகை விழா மன்றத் தலைவா் ஜி.ரவீந்திரன், செயலாளா் அங்கு.பாலசுப்பிரமணியம், நிா்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.