இன்டர் மியாமியில் இணைந்த ஆர்ஜென்டீன வீரர்..! மெஸ்ஸியின் பாதுகாவலன்!
அரசு நகரப் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு
தருமபுரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு நகரப் பேருந்து மோதியதில், சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி அருகே உள்ள உழவன்கொட்டாய் கிராமத்திலிருந்து தருமபுரி நோக்கி அரசு நகரப் பேருந்து புதன்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை தேவராஜ் ஓட்டி வந்தாா். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை அருகில் இருந்த ராமு என்பவரது வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த நரசிம்மமன் - சோனியா தம்பதியின் மகள் ஆத்விகா (4) படுகாயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் சிறுமியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையறிந்த ஊா்பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா். விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.