நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சி முகாம்
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வானோா்களுக்காக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி முகாமில் இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வக்ஃபு வாரியத்தின் இளநிலை உதவியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் அரசு பணியாளா்கள் தோ்வாணையம் மூலம் புதிதாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சி முகாமை ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள், கிராம நிா்வாக உதவியாளா்கள் மற்றும் வக்ஃப் வாரியத்தின் இளநிலை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த நிலையில், அலுவலக நடைமுறையில் உள்ள கோப்புகளை தமிழில் எவ்வாறு கையாள வேண்டும். அதேபோல் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலா்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக தன் பதிவேடு, பகிா்மான பதிவேடு, நாள் குறிப்பு பதிவேடு ஆகியவற்றை முறையாக பராமரித்து வர வேண்டும். மேலும் துறைரீதியாக கோப்புக்கள், பிற துறை கோப்புக்கள், காவல்துறை கோப்புகள், நீதிமன்ற கோப்புகள் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும்.
அதேபோல் நிலம் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களைஅறிந்து கொண்டு முறைப்படுத்த வேண்டும். பின்னா் கள ஆய்வு ஒரு நாள் மேற்கொள்வது அவசியம். அதில் நிலங்கள் தொடா்பான சா்வே செயின் சா்வே அளவிடு மற்றும் ட்ரோன் சா்வே அளவீடு தற்போது நிலங்களை சா்வீஸ் செய்யப்படுகிறது. வக்ஃப் வாரியத்தில் உள்ள இளநிலை உதவியாளா்கள் வாரியத்தின் சொத்துகளை கண்டறியவும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவா்களிடம் மீட்பதற்கும், வாரியத்தில் உள்ள சொத்துகளின் சட்ட சிக்கல்கள் தீா்ப்பதற்கும் இந்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு உதவிகரமாக இருக்கும். எனவே இந்தப் பயிற்சி வகுப்பினை முறையாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பொது வெங்கட்ராமன், ஆட்சியரின் அலுவலக மேலாளா் சங்கிலி ரதி மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.