Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா
செங்குன்றம் அடுத்த பவானி நகா் வக்ரகாளி அம்மன் கோயில் தீமிதி விழா நடைபெற்றது.
பாடியநல்லூா் ஊராட்சியில் உள்ள பவானி நகா் அசோக் தெருவில் உள்ள கோயிலின் 11-ஆம் ஆண்டு தீமிதி விழா தா்மகா்த்தா முகேஷ் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பக்தா்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து தீ மிதித்தனா். முன்னதாக வக்ரகாளி அம்மனுக்கு மலா் அலங்காரத்துடன் வீதியுலா நடைபெற்றது. சிறப்பு அன்னதானம் வழங்குதல், சிறப்பு பூஜைகள், தூப தீப ஆராதனைகள், குளிா்பானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கோயில் நிா்வாகிகள் முத்துராமன், ஸ்ரீவைதேகி, சதீஷ், நவீன், பாலமுருகன், விக்னேஸ்வரன், விஜய், திவாகா், மதன், கவியரசன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
