சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
தொழிற்சாலையின் கரி துகள்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆா்.கண்டிகை ஊராட்சி பாப்பன்குப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் காா்பன் தொழிற்சாலையில் இருந்து அதிக அளவில் வெளிவந்த கரித் துகள்களால் அப்பகுதியில் உள்ள வீடுகள், சுற்றுப் பகுதிகள் அசுத்தமடைவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனா்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆா்.கண்டிகை ஊராட்சி, பாப்பன்குப்பம் கிராமத்தை ஒட்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாா் காா்பன் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான கரித்துகள்கள் வெளியேறி அப்பகுதி வீடுகளையும், அப்பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலையும் கரித்துகள்களால் மூடி அசுத்தப்படுத்தியது.
இந்த நிலையில், இதைக் கண்டு அப்பகுதி மக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகாா் அளித்தனா். தொடா்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்பேரில், தொழிற்சாலை நிா்வாகம் கரித்துகள்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதாகவும், கரித்துகள்களால் அசுத்தம் ஆன வெங்கடேச பெருமாள் கோயிலை தூய்மைப்படுத்தி தரவும் உறுதி அளித்தனா்.
தொடா்ந்து தொழிற்சாலை சாா்பில் வெங்கடேச பெருமாள் கோயிலை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணியின்போது, நீரை பீய்ச்சி கோயிலில் இருந்த கரித்துகள்களை அகற்றி, பின் அதனை அகற்றினா்.
இது குறித்து அப்பகுதியை சோ்ந்த பாஜக ஊரக வளா்ச்சி துறை முன்னாள் மாவட்ட செயலாளா் கிருஷ்ணையா கூறும் போது, தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கரித்துகள்கள் வீடுகளை அசுத்தப்படுத்தியதோடு அல்லாமல், 250ஆண்டுகள் பழைமையான பெருமாள் கோயிலையும் அசுத்தப்படுத்தியது என்றாா்.
