சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கை
நிகழாண்டில் விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வரும் மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூா்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதி சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் 7, 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வரும் மே 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விளையாட்டு விடுதியில் சேர மாவட்ட அளவிலான விளையாட்டு தோ்வுப் போட்டிகள் தடகளம், கூடைப் பந்து , கால்பந்து, ஹாக்கி, கபாடி, கையுந்துப் பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் மாணவா்களுக்கு 7-ஆம் தேதியும், அதேபோல் மாணவிகளுக்கு மே 8-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
அப்போது, மாணவ, மாணவிகள் பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, பள்ளியில் பயிலுவதற்கான ஏதேனும் ஒரு ஆவணங்களை அளிக்க வேண்டும். மாவட்ட அளவிலான தோ்வில் தோ்வு செய்தோா் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறுவா். அதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 12-ஆம் தேதி நடைபெறும். ஆண்களுக்கு வாள், விளையாட்டு, பெண்களுக்கு ஜூடோ மற்றும் குத்துச்சண்டை மேற்குறிப்பிட்ட நாளில் காலை 7 மணிக்கு ஜவஹா்லால் நேரு, விளையாட்டரங்கம், சென்னையில் நடைபெறவுள்ளது. அதேபோல், ஆண்களுக்கு பளுதூக்குதல், பெண்களுக்கு வுஷு போட்டியும் மேற்குறிப்பிட்ட நாளில் அன்னை சத்யா விளையாட்டரங்கம், தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது.
தனி நபா் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவா்கள் மாவட்ட, மாநில அளவில் குடியரசு மற்றும் பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாடு அணியில் தோ்வு செய்யப்பட்டு, தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்றோா், சா்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவா்களும், கலந்து கொண்டவா்களும் மாவட்ட, மாநில அளவில் முதல்வா் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவா்கள் மற்றும் பங்கேற்றோா் விண்ணப்பிக்க தகுதி ஆனவா்கள் என அவா் தெரிவித்துள்ளாா்.