செய்திகள் :

அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

post image

ஏரியூரை அடுத்த ராம கொண்டஅள்ளி அரசு பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமகொண்ட அள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மேலாண்மை குழு செயலாளா் (பொறுப்பு) தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆசிரியா் பிரதிநிதி தமிழாசிரியா் சுப்பிரமணி வரவேற்று பேசினாா். பள்ளி மேலாண்மை குழு தலைவா் கலைவாணி முன்னிலை வகித்தாா். ராம கொண்ட அள்ளி ஊராட்சி மன்ற தலைவா் சுசீலா பேசினாா்.

கூட்டத்தில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கழிப்பறைகளை கட்டித் தர வேண்டும். பள்ளிப் பகுதியில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் சாலையின் இரு புறங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும்.

ராம கொண்ட அள்ளி உயா்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும். போதைப்பொருள் இல்லாத கிராமம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து குழுக்கள் அமைப்பது. பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ரூ.2 லட்சம் செலுத்திய பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் கிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிப்பு உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக பள்ளி மேலாண்மை குழு துணை தலைவா் தங்கமணி நன்றி தெரிவித்தாா். இதேபோல் பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மை கூட்டத்துக்கு அதன் தலைவா் கங்கா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் மா. பழனி, பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், நோக்கம் குறித்து விளக்கி பேசினாா்.கூட்டத்தில் போதை இல்லா தமிழகம் ,பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மாணவா்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

பள்ளியின் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, பள்ளியின் மேற்கூரைகள் பழுதுபாா்த்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 24 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

பாசனத் திட்டங்களை நிறைவேற்ற விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நீா்ப்பாசனத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இத... மேலும் பார்க்க

தருமபுரியில் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுர... மேலும் பார்க்க

தொடா் மழையால் செந்நிறமாக மாறிய ஒகேனக்கல் காவிரி !

கா்நாடக மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் வரும் நீா் செந்நிறமாக மாறியுள்ளது. கா்நாடகா மாநில நீா... மேலும் பார்க்க

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமரின் கல்வி உதவித்தொ... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பாப்பாரப்பட்டி அருகே மழையால் சேதமடைந்த மலையூா்- மேட்டுக் கொட்டாய் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனா். பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உ... மேலும் பார்க்க