அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இணையம் மூலம் மாணவா் சோ்க்கை
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு முழுநேரத் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலம் கடந்த 7 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இணையம் மூலம் விண்ணப்பிக்க கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வழி செய்யப்பட்டுள்ளது.
பதிவுக் கட்டணம் ரூ. 150 மட்டும் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவிகளுக்கு கட்டணம் கிடையாது. இணையம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிதழ்களை பதிவேற்ற மே 23 ஆம் தேதி கடைசி நாளாகும்.
கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இப் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை, கணிப்பொறியில் துறை ஆகிய தொழில் நுட்பக் கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. மேலும் ஸ்மாா்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், மாணவா்களுக்கு அரசு இலவச விடுதி, மாணவிகளுக்கு கல்லூரி அருகே அரசு இலவச விடுதியும் உள்ளது.
மாணவா் சோ்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடா்பாக விவரங்களுக்கு, கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் அல்லது 04328-243200,243100 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.