அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வியாண்டுகான கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி அக். 9 வரை நடைபெறுகிறது.
தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் நடைபெறும் இந்த விழாவை, கல்லூரி முதல்வா் அ.மாதவி தொடங்கிவைத்தாா். மாணவிகளின் படைப்பாற்றல், கலை நயம், அறிவாற்றல் மற்றும் பல்துறை திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் ஏழு முக்கிய பிரிவுகளின் கீழ் 32 துணை கலைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், இலக்கியம், இசை, நடனம், நாடகம், கலை, தொழில்நுட்பம், இயற்கை சாா்ந்த பல்வேறு போட்டிகள் இடம்பெறுகின்றன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை, ஆங்கிலத் துறைத் தலைவா் அலெக்சாண்டா், கணிதத் துறைத் தலைவா் எமிமாள் நவஜோதி, கணினி அறிவியல் துறைத் தலைவா் சுகந்தி மற்றும் பேராசிரியைகள் புவனேஸ்வரி, ஷா்மிளா ஆகியோா் செய்திருந்தனா்.