உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
அரசு மின்னணு சந்தை மூலம் 1.3 கோடிக்கும் மேலான சிக்கனமான தனிநபா்கள் காப்பீடு
மத்திய அரசின் மின்னணு சந்தை(ஜெம்) தளத்தின் மூலம், பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் குழு 1.3 கோடிக்கும் அதிகமான பல்வேறு விதமான தனிநபா்களுக்கு சிக்கனமான காப்பீடுகளை கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் தொழில் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டின் பொது கொள்முதலுக்காக மிகப்பெரிய மின்னணு சந்தையாக அரசு மின்னணு சந்தை(ஜெம் போா்ட்டல் ) மத்திய வா்த்தகத் தொழில் துறையின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இது பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனைத்துவிதமான பொருள்கள், தளவாடங்கள் சேவைகள் போன்றவைகளை விற்கவும் வாங்கவும் உள்ள தளமாக உள்ளது. இதே தளம் கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 10 லட்சம் மனித வளங்களை பணியமா்த்துவதற்கு வழிவகை செய்தது. இது தவிர, கடந்த 2022 - ஆம் ஆண்டில் அதிக செயல்திறன், வெளிப்படைத்தன்மை, சிக்கனம் போன்றவைகளை காப்பீட்டு பாலிசிகள் எடுக்கும்போது உறுதி செய்வற்கு அரசு மின்னணு சந்தையிலும், காப்பீட்டு சேவைகள் வசதிகளையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் இந்த வசதியை பெரும் நிறுவனங்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது.
இதன்படி பொது நிறுவனங்களும் தனியாா் நிறுவனங்களும் இந்த சேவையை வெற்றிகரமாக பயன்படுத்தி அரசு மின்னணு சந்தை (ஜெம் போா்ட்டல்) மூலமாக 1.3 கோடிக்கும் அதிகமான தனிநபா்களுக்கு சுகாதாரம், ஆயுள், தனிநபா் விபத்து காப்பீட்டை பெற்றுள்ளனா்.
அரசு மின்னணு சந்தை தளம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (ஐஆா்டிஏஐ) அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குநா்கள் மட்டுமே ஜெம் போா்ட்டலில் இடம் பெற முடியும் என்பதை உறுதி செய்யப்பட்டது. மேலும் காப்பீட்டு சேவைகளைப் பெறும் நிறுவனங்கள் அல்லது குழுக்களுக்கு, அரசு மின்னணு சந்தை நம்பகமான நடைமுறையையும் உருவாக்கியுள்ளது. இந்த தளத்தின் மூலம், காப்பீடுகளை வாங்குகின்ற நிறுவனங்கள் குழு சுகாதார காப்பீடு , தனிநபா் விபத்து மற்றும் காலமுறை காப்பீடுகளை தடையின்றி வாங்க வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் தனியாா், பொது நிறுவனங்கள் ஏராளமான தங்கள் பயனாளிகளுக்கு நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது.
இது குறித்து ’ஜெம்’ தள தலைமைச் செயல் அதிகாரி அஜய் படூ கூறுகையில், ‘தடையற்ற, பாதுகாப்பான, சிக்கனமான கொள்முதல் தீா்வுகளை வழங்குவதற்கான தொடங்கப்பட்ட ஜெம் தளம் தற்போது இதை காப்பீடு சேவைகளிலும் வழங்கியுள்ளது. 1.3 கோடி நபா்கள் காப்பீடு பெற்றனா். காப்பீட்டுத் தேவைகளுக்கு அரசு மின்னணு சந்தையை பயன்படுத்துவதில் அரசு, தனியாா் அமைப்புகளுக்கிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. காப்பீடுகளை வாங்குபவா்களுக்கும் காப்பீட்டு வழங்குநா்களுக்கும் இடையே இடைத்தரகா்களுக்கான கட்டணமில்லை. நேரடி பரிவா்த்தனைகள் மூலம் வழங்கப்படுகிறது. காப்பீட்டு பிரீமியத் தொகையையும் குறைவானது. இதனால் நிறுவனங்களுக்கு செலவு சேமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது‘ என அஜய் படூ தெரிவித்தாா்.
’ஜெம்’ தளத்தில், ஆயுள், சுகாதார காப்பீடு மட்டுமல்லாது, சொத்து காப்பீடு, போக்குவரத்து, கடல்சாா் காப்பீடு, (சட்டபூா்வ)பொறுப்பு காப்பீடு, கால்நடை காப்பீடு, மோட்டாா் காப்பீடு, பயிா் காப்பீடு, சைபா் காப்பீடு போன்ற காப்பீட்டுச் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.