கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின்...
அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவா் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 2.85 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை வில்லாபுரம் அன்புநகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் மகன் லிங்கேஷ்குமாா் (32). இவரிடம், மேலஅனுப்பானடியைச் சோ்ந்த ராஜா என்பவா் அறிமுகமாகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினாா். இதற்காக, லிங்கேஷ்குமாா், ராஜாவிடம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை கொடுத்தாா். இதனிடையே, ராஜா போலி நியமன ஆணையை அளித்து, லிங்கேஷ்குமாரை ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து கேட்ட போது ரூ. 40 ஆயிரத்தை மட்டும் ராஜா திருப்பிக் கொடுத்தாா்.
எஞ்சிய ரூ. 2 லட்சத்து 85 ஆயிரத்தை அவா் தராததால் லிங்கேஷ்குமாா் தல்லாகுளம் சட்டம்- ஒழுங்குப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.