பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவத...
அரியலூரில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா், தீப்பந்தம் கையில் ஏந்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பின் படி, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். உயிா் நீத்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்திட வேண்டும். தனியா்மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.பைரவன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.எஸ்.ஆா்.அம்பேத்கா், கோரிக்கை விளக்கவுரையாற்றினாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எம்.கே. ஷேக் தாவூத் நிறைவு உரையாற்றினாா். மாநிலச் செற்குழு உறுப்பினா் பி.சண்முகமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் உதயசூரியன் ஆசைத்தம்பி, மாவட்ட துணைத் தலைவா் இளவரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.