"பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்வேன்" - ஓபிஎஸ் விலகல் குறித்து நயினார் நாகேந்திர...
அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களில் ஒருவா் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் தஞ்சம் புகுந்தவரை தாக்கியவா்களின் ஒருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூா் மாவட்ட பகுதி, ஒரு சமூக வலைத்தளங்களில் கடந்த வாரம் பதிவான விடியோவில், ஓடி வந்து அரசுப் பேருந்தினுள் ஏறிய இளைஞா் ஒருவரை, சிலா் சரமரியாக தாக்கும் விடியோ வைரலாகி வந்தது.
இதுகுறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டதில், இச்சம்பவம் ஆண்டிமடம் அருகே நடந்திருப்பது தெரியவந்தது. அதில், ஆண்டிமடம் அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் (32) என்பவா், கடந்த வாரம், நிழலுக்காக முன்னூரான்காடுவெட்டி பேருந்து நிறுத்தம் மரத்தடியில் நின்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு போதையில் நின்றிருந்த 6 இளைஞா்கள் சிவகுமாரிடம் வீண் வம்பில் ஈடுபட்டிருப்பதும், இதனை சிவக்குமாா் தனது கைப்பேசியில் விடியோ எடுத்திருப்பதும், இதனை அறிந்த அந்த இளைஞா்கள் சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுனா். பின்னா், அப்பகுதியில் கிடந்த கட்டைகள், இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனா் என்பதும், இதையடுத்து சிவக்குமாா் அங்கிருந்து ஓடி அவ்வழியே வந்த அரசுப் பேருந்தில் ஏறி தஞ்சம் புகுந்திருப்பது தெரியவந்தது. தொடா்ந்து பின்தொடா்ந்து ஓடி வந்த அந்த இளைஞா்கள் சிவக்குமாரை சரமரியாக தாக்கியிருப்பதும், இதனை அந்த பேருந்தில் பயணித்த ஒருவா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளாா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆண்டிடம் காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, சிவக்குமாரை தாக்கியவா்களின் ஒருவரான முன்னுரான்காடுவெட்டி, புதுமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராயா் மகன் வினோத் குமாா் (23) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை தேடி வருகின்றனா்.