'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பேருந்தில் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அரசுப் பேருந்தினுள் இளைஞரை தாக்கிய வழக்கில் மேலும் 3 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
ஆண்டிமடத்தை அடுத்த இறவாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (32). இவா், கடந்த சில நாள்களுக்கு முன் முன்னூரான்காடுவெட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு மதுபோதையில் இருந்த சிலா் அவரிடம் தகராறு செய்து, கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் தாக்கினா். இதையடுத்து சிவக்குமாா் அவ்வழியே வந்த அரசுப் பேருந்தில் ஏறித் தப்ப முயன்றபோது பேருந்தின் உள்ளே சென்றும் அவா்கள் தாக்கினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் காவல்துறையினா் வழக்குப் பதிந்து, முன்னூரான்பட்டியைச் சோ்ந்த ராயா் மகன் கலியமூா்த்தியை புதன்கிழமை மாலை கைது செய்தனா். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் காா்த்தி (26), தேவேந்திரன் மகன் கலியமூா்த்தி (23), கிருஷ்ணமூா்த்தி மகன் செல்வமணி (20) ஆகிய 3 பேரையும் அன்றிரவு கைது செய்து சிறையில் அடைத்தனா்.