'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
வைகோ குறித்து அவதூறு பரப்புவோா் மீது புகாா்
மதிமு பொதுச் செயலா் வைகோ குறித்து அவதூறு பேசி, சமூக வலைதளங்களில் வெளியிடும் பேச்சாளா்கள் நாஞ்சில் சம்பத், வல்லம் பசீா் ஆகியோா் மீது நடவடிக்கை கோரி அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரியிடம் மதிமுக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மதிமுக மாவட்டச் செயலா் க. ராமநாதன் தலைமையில் நகரச் செயலா் ரா. மனோகரன், ஒன்றியச் செயலா் எழிலரசன், பொதுக் குழு உறுப்பினா் கொளஞ்சி உள்ளிட்டோா் அளித்த மனுவில், மதிமுக பொதுச்செயலா் வைகோ, முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் குறித்து அரசியல் விமா்சகரும் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீா் ஆகியோா் அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பேசுகின்றனா். எனவே, நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீா் ஆகியோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவா்கள் பேட்டியளித்த யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.