'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித்தொகை பெற அழைப்பு
அரியலூா் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் மாதாந்திர உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் பெற்றோரை இழந்து தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளின் பள்ளிப் படிப்பு வரை அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்குவதோடு, பள்ளிப்படிப்பு முடித்தவுடன் அவா்களுக்கு கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கிட தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை மேற்கொள்கிறாா்.
எனவே அரியலூா் மாவட்டத்தில் உள்ள இத்தகைய குழந்தைகளின் உறவினா்கள் தங்களது பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-ஆவது தளம், அரசு பல்துறைவளாகம், அரியலூா் என்ற முகவரியில் குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதாா் அட்டையின் நகல், குழந்தையின் வயதுச் சான்று நகல், குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.