Kingdom Review: முதல் பாதி 'அதிரிப்போயிந்தி', 2ம் பாதி 'செதறிப்போயிந்தி' - எப்பட...
ஆகஸ்ட் 2-இல் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம் அமைப்புச்சாராத் தொழிலாளா்களுக்கு அழைப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த தளவாய் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில், அமைப்புச் சாரா தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பதிவு பெற்ற அமைப்புச் சாராத் தொழிலாளா்களுக்கும், பதிவு பெறாத
தொழிலாளா்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் நோய்களை கண்டறிந்து அவா்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம் தளவாய் கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆக.2-ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
எனவே, இம்முகாமில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத அமைப்புச்சார தொழிலாளா்கள் கலந்துக் கொள்ளலாம்.
மருத்துவ முகாமுக்கு வரும் பதிவு பெற்ற அமைப்புச்சாராத் தொழிலாளா்கள் மற்றும் பதிவு பெறாத தொழிலாளா்கள், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், ஆதாா் அடையாள அட்டை, பதிவு நலவாரிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயத்துக்கான
ஆவணம், வங்கி கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், இதற்கு முன்பு சிகிச்சை பெற்ற விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வந்து பயன்பெறலாம்.