அரியாங்குப்பத்தில் பொங்கல் சிறப்பு சந்தை
புதுச்சேரி: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பொங்கல் சந்தை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுவை ஊரக வளா்ச்சித் துறை மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் பொங்கல் சந்தை மற்றும் கிராம சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை, புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திறந்துவைத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை பாா்வையிட்டாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பொங்கல் சந்தையில் பண்டிக்கைக்கு தேவையானப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மகளிா் சுய உதவிக் குழுவினா் தரமான முறையில் பொருள்களை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனா்.
நாட்டில் உள்ள மாநிலங்களில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, ஆளுநா் உரைக்கு முன்பும், பின்பும் இருமுறை தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.
புதுவையிலும் இந்த நடைமுைான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் என்ன முறை கடைப்பிடிக்கப்படுகிறது என தெரியவில்லை என்றாா்அவா்.
இந்த நிகழ்வின் பேது, ஊரக வளா்ச்சித் துறை செயலா் ஏ.நெடுஞ்செழியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பி.அருள்ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.