Shakthi Thirumagan: ``விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்ததே என் கணவர்தான்" - நடிகர் வ...
அரூரில் பரவலாக மழை
அரூா் சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 8 மணி முதல் சுமாா் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது.
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பெய்த மழை காரணமாக விவசாய நிலங்களிலும், சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. இந்த மழை காரணமாக ஆவணி பட்டத்தில் நெல் நடவு, தக்காளி பயிரிடுதல், மானாவாரியாக அவரை, துவரை பயிரிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.