சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
அரையாண்டு விடுமுறை நிறைவு: பள்ளிகளில் மூன்றாம் பருவ புத்தகங்கள் விநியோகம்
வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் தவறான தகவல் பரவியது. ஆனால், இதனை மறுத்த பள்ளிக் கல்வித்துறையினா் வழக்கம்போல் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்தனா்.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள், குறிப்பேடுகளும் தமிழக அரசு சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கடந்த டிசம்பா் 9 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து 25 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டுத் தோ்வு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.