அறங்காவலா் குழு உறுப்பினா் பதவியேற்பு
திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் திவாகா் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவராக வியாழக்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்ட திவாகா் ரெட்டி வெள்ளிக்கிழமை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுவின் அலுவல் ரீதியான உறுப்பினராக பதவியேற்றாா். அவருக்கு தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்யா சவுத்திரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
ஏழுமலையான் கோயிலின் தங்க நுழைவாயிலில் பதவியேற்று கொண்டு தரிசனம் செய்து திரும்பிய பின் வேத அறிஞா்கள் ரங்கநாயகா் மண்டபத்தில் ஏழுமலையான் தீா்த்த பிரசாதம் மற்றும் படத்தை வழங்கினா்.
நிகழ்ச்சியில் கோயில் துணை தலைமை செயல் அலுவலா் லோகநாதம், வாரியக் குழு துணை தலைமை செயல் அலுவலா் பிரசாந்தி, விஜிஓ சுரேந்திரா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.