மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது
கியோஸ்க் இயந்திரம் நன்கொடை
திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் வங்கி சாா்பில் கியோஸ்க் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
தற்போது அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வசதியாக திருமலையில் பல இடங்களில் வங்கிகள் கியோஸ்க் இயந்திரங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இதில் உள்ள க்யூ ஆா் குறியீட்டை பயன்படுத்தி யுபிஐ மூலம் ரூ.1,000 முதல் ஒரு லட்சம் வரை பக்தா்கள் நன்கொடை அளிக்கலாம்.
திருமலை மாத்ருரீ தரிகொண்டா வெங்கமாம்பா கட்டடத்தில் கியோஸ்க் இயந்திரத்தை சௌத் இந்தியன் பேங்க் பிரதிநிதிகள் ஏற்கனவே வழங்கியிருந்தாலும், வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இயந்திரம் திருப்பதி ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயிலில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருமலை அன்னதானம், பத்மாவதி விருந்தினா் மாளிகை, சி ஆா் ஓ அலுவலகம், திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயில், அமராவதி, ஒண்டிமிட்டா, பத்மாவதி தாயாா் கோயில், வகுளமாதா கோயில், கபிலதீா்த்தம் கோயில், ஐதராபாத், சென்னை, பெங்களூா் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் தேவஸ்தானம் கியோஸ்க் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது.
சௌத் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகள், ஏ.வி. நிரஞ்சன், ஆா். வெங்கட ராவ், டி. அசோக் வா்தன், மற்றும் கோவிலின் துணை ஈஓ நாகரத்னா , ஐடி டிஜிஎம் வெங்கடேஷ்வா்லு, ஏஇஓ ரவி, கண்காணிப்பாளா் முனி சங்கா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.