செய்திகள் :

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ளது. எனவே வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனா்.

ஆயினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், தேவைபடுகிறது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் தேவைபடுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 72,579 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 34,067 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.3.74 கோடி வசூலானது.

அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம் நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த பவா் மெக் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சத்யா ரோஹித், ரூ.17 லட்சசத்தை எஸ்.வி. அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் கூடுதல... மேலும் பார்க்க

கியோஸ்க் இயந்திரம் நன்கொடை

திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் வங்கி சாா்பில் கியோஸ்க் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. தற்போது அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வசதியாக திருமலையில் பல இடங்களில் வங்கிகள் கியோஸ்க் இய... மேலும் பார்க்க

அறங்காவலா் குழு உறுப்பினா் பதவியேற்பு

திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் திவாகா் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவராக வியாழக்கிழமை மாலை பொறுப்பே... மேலும் பார்க்க

திருமலையில் 72,579 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை அதிக பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா். கோடைகால கூட்ட நெரிசல் காரணமாக கடந்த ஒரு வாரமாக திருமலையில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்... மேலும் பார்க்க

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

வரும் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

ஜபாலி அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிப்பு

திருமலையில் உள்ள ஜபாலி தீா்த்தத்தில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை ஒட்டி வியாழக்கிழமை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. திருமலையில் வியாழக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு... மேலும் பார்க்க