Soori: 'ஒரு ‘வியூ’க்காக தயவு செய்து இப்படி பண்ணாதீங்க...' - மக்களுக்கு சூரி வைத்...
திருமலையில் 72,579 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை அதிக பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோடைகால கூட்ட நெரிசல் காரணமாக கடந்த ஒரு வாரமாக திருமலையில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்கமாக, வியாழக்கிழமைகளில், காலை திருப்பாவாடை சேவை மற்றும் மாலை புஷ்பாங்கி சேவை காரணமாக பக்தா்களுக்கான தரிசனம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறையும். வியாழக்கிழமைகளில், வழக்கமாக 62 முதல் 63 ஆயிரம் பக்தா்களுக்கு மட்டுமே ஏழுமலையான் தரிசனம் வழங்கப்படும்.
இருப்பினும், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தலைமையில், திருமலையில் உள்ள அனைத்து துறைகளும் அவ்வப்போது ஒருங்கிணைக்கப்பட்டு, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு வியாழக்கிழமை தரிசனம் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக, வியாழக்கிழமை முதல் முறையாக 72,579 போ் ஏழுமலையானை தரிசித்தனா். சிறப்பாக பணிபுரிந்த அனைத்து துறைகளின் ஊழியா்களுக்கு கூடுதல் செயல் அதிகாரி பாராட்டுத் தெரிவித்தாா்.