2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
அறநிலையத் துறையின் நிதி மாணவர்களுக்கு கிடைக்காது! இபிஎஸ் விளக்கம்!
அறநிலையத் துறையின் நிதியில் கல்லூரிகள் கட்டப்படுவதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பதாகக் திமுகவினர் விமர்சித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அறநிலையத் துறையில் இருந்து நிதி தரவேண்டாம் என்று கூறவில்லை. அவ்வாறு செய்தால், மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று கூறினேன்.
அறநிலையத் துறையின் நிதியின் மூலம் கல்லூரிகள் அமைக்கப்பட்டால், மாணவர்களுக்கு உரிய முழு நிதியும் கிடைக்காது என்பதை திரித்து, அதன்மேல் கண், காது, மூக்கு வைத்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் 21 பாலிடெக்னிக் கல்லூரிகள், 11 மருத்துவக் கல்லூரிகள், 4 சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன.
41 உறுப்புக் கல்லூரியாக இருந்தவற்றை, அரசுக் கல்லூரிகளாக மாற்றியது அதிமுக ஆட்சியில்தான்.
முதுநிலை பட்டப்படிப்புக்கான வகுப்புகளைத் தொடங்காவிட்டால், சி.வி. சண்முகம் தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:நிர்வாகத் தோல்விகளுக்கு, வெறும் மன்னிப்பு மட்டுமே போதுமா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி