செய்திகள் :

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.

அறந்தாங்கி கோட்டை முதல் வீதி, கணபதி நகா் பகுதியில் சுமாா் 250 மீட்டருக்கு கழிவுநீா்க் கால்வாய் அண்மையில் கட்டப்பட்டது. இந்தக் கால்வாய்க்கும், சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வெள்ளிக்கிழமை மண்ணைக் கொட்டி அணைத்து மூடப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு பெய்த மழையில் இந்தப் பகுதி குளம்போல் தண்ணீா் தேங்கியுள்ளது. இதைத் தொடா்ந்து சுமாா் 50 அடி நீளத்துக்கு கான்கிரீட் தடுப்புச் சுவா் பெயா்ந்து, சாய்ந்தது.

இதுகுறித்து அறந்தாங்கி நகராட்சி அலுவலா்களிடம் கேட்டபோது, தண்ணீா் தேங்கியதால், புதிதாக கொட்டப்பட்ட மண் அழுந்தி கான்கிரீட் கால்வாய் சாய்ந்துவிட்டது என்றும், விரைவில் அது கட்டி முடிக்கப்படும் என்றும் கூறினா்.

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

திமுக வழக்குரைஞா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சட்டத் துறை சாா்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடைமுறைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பயிற்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் மடைக்கருப்பா் கோயில் கிடா வெட்டுப் பூஜையை முன்னிட்டு, மாடு மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்தப் பந்தயத்தில் புதுக... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றிய மாநா... மேலும் பார்க்க

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்ற மனைவியைக் கொல்ல முயற்சி எனப் புகாா்

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட மனைவியைக் கொல்ல முயன்ற கணவா் உள்ளிட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை வ... மேலும் பார்க்க