செய்திகள் :

அறவழியில் மக்களைச் சந்தித்தவர்களை கைது செய்வதா? - விஜய் கண்டனம்!

post image

தவெக கட்சியினர் கைதுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் எழுதி வெளியிட்டார். விஜய் எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த தவெக தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்து பின்பு விடுவித்தனர்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இதையும் படிக்க: கைதான தவெக நிர்வாகிகளுடன் பேசிய விஜய்!

இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.

சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சியினரை வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர்.

ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது.

கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சியினரை கைது செய்வது தான் ஜனநாயகமா?

இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மியான்மரில் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்!

மியான்மரில் சுமார் 60 கிலோ அளவிலான மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஜன.4) தெரிவித்துள்ளனர்.கிழக்கு மியான்மரின் ஷன் மாநிலத்தில் போதைப் பொருள் த... மேலும் பார்க்க

பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது!

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்திலுள்ள ஹென்ரிக்கோ டாக்டர்ஸ் மருத்துவமனையில் 3 பச்சிளம் குழந்தைகளின் எலும்புகளை உடைத்த கொடூர நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் அந்த மருத்த... மேலும் பார்க்க

ஈக்வடார் நாட்டில் அவசரநிலை பிரகடனம்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் 7 மாகாணங்கள் மற்றும் 3 நகராட்சிகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.உள்நாட்டு மோதல்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவமும... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினரால் சுட்டுக்கொலை!

பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.பிகார் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆயுதம் ஏந்திய கொள்ளைப் போன்ற... மேலும் பார்க்க

முக சீரமைப்பு சிகிச்சை பெற்று பயனடைந்த சிறுமிக்கு வீடு: முதல்வர் வழங்கினார்

சென்னை: அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தான்யாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் புதிதாக கட்டப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் வெடிவிபத்து! ஒருவர் பலி!

தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் ஒருவர் பலியாகியுள்ளார். அம்மாநிலத்தின் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு... மேலும் பார்க்க