செய்திகள் :

அறிவுறுத்துவதை பின்பற்றுகிறார் சூர்ய குமார்; கிரிக்கெட்டுதான் அவமரியாதை! பாகிஸ்தான் கேப்டன்

post image

இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவின் செயல்களால் எங்களுக்கு அல்ல, கிரிக்கெட்டுக்குதான் அவமரியாதை என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நேற்றிரவு மோதிய இந்தியா அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசியக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பின்போது, பாகிஸ்தான் கேப்டனுடன் இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ் கைகுலுக்கியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்து, பாகிஸ்தானுடனான லீக் மற்றும் சூப்பர் 4 போட்டிகளில் டாஸ் சுண்டும்போது, அந்த அணியின் கேப்டனுடன் சூர்ய குமார் யாதவ் கைகுலுக்கவில்லை. விளையாட்டு நிறைவடைந்த பிறகும், இந்திய வீரர்கள் கைக்குலுக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் புகார் அளித்திருக்கும் நிலையில், நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் கைகுலுக்கவில்லை.

மேலும், ஆசியக் கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வி கைகளால் வாங்க மறுத்துவிட்டனர். இதனால், இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை.

இந்த சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களுடன் பாகிஸ்தான் கேப்டன் பேசியதாவது:

”இந்தப் தொடரில் இந்திய அணி செய்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கைகுலுக்காததால் எங்களை அவமதிக்கவில்லை, கிரிக்கெட்டைதான் அவமதித்தார்கள். அவர்கள் செய்ததை ஒரு நல்ல அணி செய்திருக்காது.

தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பு மற்றும் நடுவர்கள் சந்திப்பின்போது சூர்ய குமார் என்னுடன் கைகுலுக்கினார். ஆனால், வெளியுலகத்தில் கேமிரா முன்பு கைகுலுக்க மறுக்கிறார்கள்.

அறிவுறுத்தலை சூர்ய குமார் பின்பற்றுகிறார் என்பது எனக்கு புரிகிறது. தனிப்பட்ட முறையில் சூர்ய குமார் முடிவெடுத்தால் என்னுடன் கைகுலுக்கி இருப்பார்.

இன்று நடந்த அனைத்தும் முன்பு நடந்தவற்றின் விளைவாகும். ஆசியக் கவுன்சில் தலைவர்தான் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கோப்பையை வழங்குவார். அவரிடம் இருந்து பெறவில்லை என்றால், கோப்பையை எப்படி பெறுவீர்கள்?

இதுபோன்று நடப்பதை முதல்முறையாகப் பார்க்கிறேன். இது கிரிக்கெட்டுக்கு கெடுதல் என்பதால், ஒரு கட்டத்தில் நின்றுவிடும் என நம்புகிறேன்.

நான் வெறும் பாகிஸ்தான் கேப்டன் மட்டுமல்ல, ஒரு கிரிக்கெட் ரசிகன். இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதனை பார்க்கிறது என்றால், அவர்களுக்கு நாம் நல்ல செய்தியை அனுப்பவில்லை.” எனத் தெரிவித்தார்.

இறுதியில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பலியான பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு எங்கள் அணி வீரர்கள் அனைவரின் ஊதியத்தையும் நன்கொடையாக வழங்குகிறோம் என்று சல்மான் அகா அறிவித்தார்.

இதனிடையே, பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க வேண்டாம் என்று களத்தில் இருந்த வீரர்களே முடிவெடுத்ததாக இந்திய கேப்டன் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Pakistan captain criticizes Indian cricket team

இதையும் படிக்க : ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை! சூர்ய குமார்

அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் என்னுடைய ஆட்டம் மேம்பட்டிருக்காது: அபிஷேக் சர்மா

இந்திய அணியில் சீக்கிரம் இடம்பிடித்திருந்தால் தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள நேரம் கிடைத்திருக்காது என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. துபையி... மேலும் பார்க்க

ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை! சூர்ய குமார்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அமைச்சர் கையில் கோப்பை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிம் கைகளில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க முடியாது என இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இதனால், அந்தக் கோப்பையை ஆசியக் கோப்பை நிர்வாகம் மீண்டும் எடுத்துச் செ... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையில் இந்திய அணி சாம்பியன்! பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது!

பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஆசியக் கோப்பை வென்றதைப் பற்றி... ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க

166 ஆண்டுகால சாதனையை முறியடித்த ராகுல் சஹார்! அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்டுகள்!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி இந்திய வீரர் ராகுல் சஹார், 166 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுன்டி கிரிக்க... மேலும் பார்க்க

இறுதிப்போட்டி: பந்துவீச்சில் அசத்திய இந்தியா; 146 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வ... மேலும் பார்க்க