ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
அல்போன்சா கல்லூரியில் இசைத் திறன் விழா
கருங்கல் அருகே புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை சாா்பில் இசைத் திறன், உணவுத் திருவிழா நடைபெற்றது. துறைவாரியாக மாணவா்களின் உணவுக் கண்காட்சி, இசை - பாடும் திறன்களை ஊக்குவிக்கும் வகையிலான நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
மாணவா் பேரவை ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியை அக்சா இமாகுலேட் தலைமை வகித்தாா். மாணவா் பேரவைத் தலைவா் இயற்பியல் துறை முதுநிலை 2ஆம் ஆண்டு மாணவா் ஹரி முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தாளாளா் ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வா் ஆா். சிவனேசன், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் மாணவா்-மாணவியரைப் பாராட்டினா்.