அழுகிய நிலையில் ஆண் சடலம்
தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கழிவறையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பொறையாா் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சடலமாக கிடந்தவருக்கு சுமாா் 40 வயது இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.